வாருங்கள் வாருங்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து சக்தி மிக்க
சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்.
-அன்புடன் சக்திப்பிரதா

புதன், 26 ஜனவரி, 2011

கர்மா - நியூட்டனின் 3ம் விதி

"ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு"

இது நியூட்டனின் 3ம் விதி. நம்மில பல பேர் நியூட்டனின் 3ம் விதி சடப்பொருளுக்கு மட்டும் தான் செல்லுபடியாகும் என்று நினைக்கிறாங்க. இதெல்லாம் Science, Maths படிக்கிறவங்களுக்குத் தான் சரி. நமக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை அப்பிடின்னு ஒதுங்கிக்கிறாங்க. அது ரொம்பத் தப்பு அப்பிடின்னு நா சொல்றன். ஏன்னா நா பட்ட அனுபவம், மற்றது மற்றவங்க பட்ட அனுபவம், இன்னும் சொல்லணும்னா பாத்தது கேட்டது, மற்றவங்க வாழ்கையை அலசி ஆராஞ்சது இதிலேர்ந்து நா கிரகிச்சுக் கொண்டது, அதில இருந்து நா எடுத்த முடிவுகள் இத வச்சு தான் நா இப்பிடி சொல்றன். என்ன குழப்பமா இருக்கா? இருங்க இருங்க புரியும் படியா சொல்றன்.

நம்மில பலபேர் தெரிங்சோ தெரியாமலோ நிறைய தப்புக்கள் பண்ணறம். அதுக்கப்புறம் அத நியாயப்படுத்த பல காரணங்கள் சொல்றம். இல்லைன்னா அத மூடி மறைக்க இன்னும் நிறைய தப்புக்கள் பண்ணறம். எல்லாம் சரியாயிடிச்சின்னா நாம வென்றதா நினைச்சுக்கிறம். சில நாள்ல எல்லாவற்றையும் அடியோட மறந்திடுறம். அதோட கடந்த கால chapter ஐ close பண்ணிறுவம். ஏன்னா நாம ஜெயிச்சிட்டம் இல்லையா அந்த திமிருல. but அதுக்கப்புறம் தான் நம்ம கணக்கு தீர்க்கிற வேலையை இயற்கை (இறைவன்) ஆரம்பிக்கிது. அத நாம அறியமாட்டம். இயற்கை எப்பிடி இந்த கணக்கை தீர்க்குது எண்டு ஆராஞ்சு பார்த்தா குறைஞ்ச பட்சம் நியூட்டனின் 3ம் விதியை அது யூஸ் பண்ணியிருக்கும். நீங்க விட்ட கணக்கு ரொம்ப சிக்கலா, தீர்க்க கடினமா இருந்தா அதற்கு மேல நாம இன்னும் கண்டு பிடிக்காம இருக்கிற ஏதாவது ஒரு law ஐ யூஸ் பண்ணியிருக்கும். அதற்கப்பறம் நாம முழி பிதுங்கி எதுவும் செய்ய இயலாது. ஏன்னா இயற்கை சமநிலையை பாதுகாப்பது இயற்கைக்கு ரொம்ப முக்கியமானது. அது தன்னோட கடமையை இதுவரை சரியா செஞ்சுண்டிருக்கு. இனிமேலும் சரியா தான் செய்யும். என்ன புரிஞ்சுதா?

தப்பு செய்யுறவன் தான் இன்னிக்கு நல்லாயிருக்கான் எண்டு பல பேரு நினைக்கிறாங்க. அது ரொம்ப தப்பான நினைப்பு. இத நீங்க எல்லாரோட வாழ்க்கையையும் ஆராஞ்சு பாத்தீங்கன்னா தெளிவா புரியும்.

அதனால நாம மற்றவங்களுக்கு உதவி செய்யலைனாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாதிருப்போம். அது நமக்கு தான் நல்லது.

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"

9 comments:

ம.தி.சுதா சொன்னது…

அருமையான உணர்த்தல் ஒன்று...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்

சக்திப்பிரதா சொன்னது…

மிக்க நன்றி.

sarujan சொன்னது…

முதல் முயற்சி முத்தான வார்த்தைகள் எனது வாழ்த்துகள்

சக்திப்பிரதா சொன்னது…

ரொம்ப மகிழ்ச்சி சகோதரனே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான்.
தப்பு செஞ்சவன் தண்டனை பெறுவான்..

சக்திப்பிரதா சொன்னது…

ரொம்ப சரியாய் சொன்னீங்க ராஜேஸ்வரி.

குணசேகரன்... சொன்னது…

மிகவும் அருமை...give more posts.
pls add follwers widget. i will be join in ur blog.

http://zenguna.blogspot.com

மாய உலகம் சொன்னது…

முற்றிலும் உண்மையே... தப்பு செய்துவிட்டு தப்பிக்க பார்ப்பவர்களுக்கு ஒரு சவுக்கடி....
நாம மற்றவங்களுக்கு உதவி செய்யலைனாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாதிருப்போம்.
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"
ஆணித்தரமான வரிகள்...
rajeshnedveera

மாய உலகம் சொன்னது…

இது போல் பலரும் தன் வாழ்வில் நடந்த சம்பவங்களையே...பாடங்களாக எடுத்துக்கொண்டால் கூட மற்றவர்கள் உபத்திரவத்தில் இருந்து தப்பித்துவிடலாம்....
-----
இங்கு நமக்காக நபிகள் சொன்ன பொன்மொழி ஒன்று...
பிறர் இன்னல் அடைவதைக் கண்டு நீ சிரிக்காதே. அதில் மகிழ்ச்சியும் அடையாதே. ஏனென்றால் அவனுக்கு நல்ல நிலமையை ஏற்படுத்தி இறைவன் உன்னை சோதனைகளில் மூழ்க வைப்பான்.
-------------------------
சிரிப்பது மட்டுமல்ல அடுத்தவர்களின் சந்தோசத்தை கெடுக்க கங்கனம் கட்டிக்கொண்டு அலையும் அரக்ககுணம் உள்ளவர்களும் இங்கு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்....இவர்களுக்கெல்லாம்மாபெரும் தண்டனை இறைவனிடத்தில் காத்துக்கொண்டுதான் இருக்கிறது.......
-----------------------
நீயூட்டனின் 3ம் விதி உண்மையெ நண்பரே..... இது போல் பதிவுகளை மேலும் தொடருங்கள்...
friendly,
rajeshnedveera